பியூட்டி பார்லர் பெண் தற்கொலை

கோவை, ஜூலை 16: கோவை போத்தனூர் பாரதி நகரை ேசர்ந்த ஆறுமுகம் என்பவர் மகள் கனிஷ்கா (21). அழகு நிலைய ஊழியர். இவரின் தாய், தந்தை கருத்து வேறுபாட்டினால் பிரிந்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். கனிஷ்கா தாயுடன் வசித்து வந்தார். மதுரையில் இவர்களின் பூர்வீக வீடு உள்ளது. சில ஆண்டிற்கு முன் இவர்கள் கோவைக்கு வந்து விட்டனர். கடந்த 13ம் தேதி கனிஷ்காவின் தாய் கலைசெல்வி, கோவையில் இனி வாழ முடியாது. மதுரைக்கு செல்லலாம் எனக்கூறியுள்ளார். கனிஷ்கா வர மறுத்து விட்டார். கலைசெல்வி மதுரைக்கு புறப்பட்டு சென்ற நிலையில், மனம் உடைந்த கனிஷ்கா தூக்கு போட்டு இறந்தார். கனிஷ்காவின் அக்கா 3 ஆண்டிற்கு முன் குடும்ப விவகாரத்தால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடதக்கது. இது தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரிக்கின்றனர்.

 ---------------------------

Advertising
Advertising

Related Stories: