சாதாரண பேருந்துகளை அடையாளம் காண பாலியல் வன்கொடுமை செய்து கொலை சிறுமியின் குடும்பத்திற்கு நிதி உதவி ஸ்டிக்கர்

கோவை, ஜூலை 16:  பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

 கோவை துடியலூர் அருகே பன்னிமடை கிராமத்தில் கடந்த மார்ச் 26ம் தேதி ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே சிறுமியின் பெற்றோருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
Advertising
Advertising

அதன்படி சிறுமியின் பெற்றோர்களிடம் ரூ.3 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் ராசாமணி வழங்கினார். காசோலையை பெற்றுக் கொண்ட சிறுமியின் தாய் வனிதா, தனக்கு அரசு வேலை வழங்குமாறு கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ராசாமணி தெரிவித்தார்.

இன்ஜின் முன்புறம் உடல்

சிக்கியதால் பயணிகள் பீதி கோவை, ஜூலை 16: சென்னையில் இருந்து கோவை வழியாக மங்களூர் செல்லும் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 8.30 மணியளவில் வடகோவை அருகே வந்துகொண்டிருந்த போது 35 வயதுமதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ரயில் அவர் மீதுமோதியது. இதில் அவரது உடல் ரயில் இன்ஜினின் முன்புறம் உள்ள கம்பிகளில் சிக்கியது. இது ரயில் பைலட்டுக்கு தெரியவில்லை. இதனால், சடலத்துடனே ரயில் கோவை ரயில்நிலையத்திற்கு வந்தது. ரயிலின் முன்புறம் சடலம் தொங்கியபடி வருவதை கண்ட அங்கிருந்த பயணிகள் பீதியடைந்து கூச்சலிட்டனர். இதையடுத்து பைலட் ரயிலின் முன்புறம் பார்த்த போது சடலம் ரயிலில் சிக்கியிருப்பது தெரியவந்தது.

தகவலறிந்த எஸ்.ஐ சவரிராஜ் தலைமையிலான ரயில்வே போலீசார் அங்கு சென்று உடலை மீட்டனர். அவர் யார் என்று தெரியவில்லை. சுமார் ஒரு மணிநேரம் தாமதாமக ரயில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் ரயில்நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Related Stories: