×

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 263 மனுக்கள் பெறப்பட்டன

ஈரோடு, ஜூலை 16: ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இக் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில்கடன், குடிநீர், சாலை வசதி, அடிப்படை வசதி மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாக 263 மனுக்கள் வந்தது. மனுக்களை பெற்ற கலெக்டர் கதிரவன் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், மாவட்ட உயர் அலுவலர்களின் மனுநீதிநாள் முகாம் மனுக்கள், மக்களை தேடி வருவாய்த்துறை திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் குறித்தும், அதன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Tags :
× RELATED வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்றவர் உட்பட 3 பேர் கைது