கஞ்சா, மது விற்ற 4 பேர் கைது

ஈரோடு, ஜூலை 16:  பங்களாப்புதூர் எரங்காட்டூர் பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்ற போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த கோபி கள்ளிப்பட்டி எரங்காட்டூர் புதுகாலனியை சேர்ந்த ஆறுமுகம் (32) என்பவரை போலீசார் கைது செய்ததோடு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 150 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதேபோல், டிஎன் பாளையத்தில் மது விற்ற டிஎன் பாளையம் குமரன் கோயில் வீதியை சேர்ந்த ஞானசேகரன் (53), கடத்தூர் மேட்டுக்காடு என்ற இடத்தில் மது விற்ற கோபி குருமந்தூர் ஆறுவல்லக்காடு பகுதியை சேர்ந்த சின்னச்சாமி (49), கோபி கலிங்கியம் சாலையில் மது விற்ற சுள்ளிக்காட்டு வீதியை சேர்ந்த செந்தில்குமார்(35) உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: