ஊரக திறனாய்வு தேர்வுக்கு 9ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூர்,  ஜூலை 16:ஊரகப் பகுதிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்,  ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்’ என்று அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது.அரசு அங்கீகாரம் பெற்ற, ஊரகப் பகுதிகளில் உள்ள  பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான, ஊரகத்  திறனாய்வுத் தேர்வுக்கு இன்று (15ம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம்.  (நகராட்சி, மாநகராட்சிகளில் படிக்கும் மாணவர் விண்ணப்பிக்க முடியாது).  வரும் 25ம் தேதிக்குள்ளாக, அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம்,  விண்ணப்பிக்க வேண்டும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. பெற்றோரின் ஆண்டு  வருமானம் ரூ.1 லட்சத்துக்குள்ளாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும்  தலா 50 மாணவர், 50 மாணவியர் தேர்வு செய்யப்படுகின்றனர். பிளஸ் 2 படிக்கும்  வரை, தேர்வாகும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய், கல்வி உதவித்தொகை  வழங்கப்படும்.

Advertising
Advertising

Related Stories: