அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 16:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அங்கன்வாடி திட்டத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை தவிர்க்கவேண்டும். மத்திய அரசு வழங்கும் ஊதிய உயர்வு ரூ.1500ஐ உடனடியாக நிலுவையுடன் தமிழக அரசு வழங்க வேண்டும். பிறதுறை பணிகளை அங்கன்வாடி ஊழியர்களிடம் திணிப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சுசீலா தலைமை வகித்தார். சித்ரா முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்ட பொருளாளர் குமார், மாவட்ட செயலாளர் ரங்கராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன், ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர். மாநில பொருளாளர் பாக்கியம் நிறைவுரையாற்றினார்.

Related Stories: