இலவச தொழிற் பயிற்சி கனரா வங்கி அழைப்பு'

திருப்பூர்,  ஜூலை 16:கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி மைய நிர்வாக இயக்குனர்  தர்மலிங்கம் கூறியுள்ளதாவது:

பயிற்சி  மையம் சார்பில், சணல் பை, சணல் பொருள் தயாரிப்புக்கு 13 நாள் பயிற்சியும்,  மொபைல் போன் சர்வீஸ் பயிற்சி 30 நாட்களும் நடைபெற உள்ளன. முற்றிலும்  இலவசமாக அளிக்கப்படும், இந்த முழு நேரப் பயிற்சியில் சேர, எழுத படிக்க  தெரிந்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இரு பாலரும்  விண்ணப்பிக்கலாம். 15ம் தேதி (இன்று) முதல் வருகிற 23ம் தேதி வரை  விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யலாம். 24ம் தேதி நேர்காணல் நடைபெறும்.
Advertising
Advertising

  பயிற்சி காலத்தில் மதிய உணவு வழங்கப்படும். பயிற்சி முடிவில் சான்றிதழ்  வழங்கப்படும். சேர விரும்புவோர் ‘கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு  பயிற்சி நிலையம், கோவை டிபார்ட்மென்ட் ஸ்டோர் வளாகம், அவிநாசி ரோடு,  அனுப்பர்பாளையம், திருப்பூர்-641 652’ என்ற முகவரிக்கு நேரில் வரவும்.  முதலில் வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு  99525-18441 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில்  கூறியுள்ளார்.

Related Stories: