சிலம்ப போட்டியாளர்கள் தேர்வு

உடுமலை, ஜூலை 16:உடுமலை முழுநேர கிளை நூலகத்தில் பகத்சிங் சிலம்பம், களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் சார்பில் இலவச சிலம்பம் மற்றும் களரி பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் சென்னையில் தமிழ்நாடு சைலாத் சிலம்ப சங்கம் நடத்தும் மாநில அளவிலான போட்டியில் வரும் 26ம் தேதி பங்கேற்க உள்ளனர். இதற்கான மாணவர்கள் தேர்வு நிகழ்ச்சி நடந்தது. நூலக வாசகர்வட்ட தலைவர் இளமுருகு தலைமை வகித்தார். நூலகர் கணேசன், வாசகர் வட்ட பொருளாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.ஏற்பாடுகளை, பகத்சிங் சிலம்பம், களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் செயலாளர் வீரமணி, உதவியாளர்கள் மற்றும் நூலகர்கள் மகேந்திரன், அருள்மொழி, செல்வராணி ஆகியோர் செய்திருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: