தொழிற்சங்க கூட்டமைப்பின் கொடியேற்று விழா

உடுமலை, ஜூலை 16:தமிழ்நாடு தொழிற்சங்க கூட்டமைப்பு (டிடியூசி) சார்பில் கொடியேற்று விழா உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு நேற்று நடந்தது. மாநில குழு உறுப்பினர் சுப்பாள், மாவட்ட செயலாளர் மூர்த்தி, பால்நாராயணன் பங்கேற்றனர். புதிய செயலாளராக வெங்கடாசலம், தலைவராக மணி, பொருளாளராக கிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.கூட்டத்தில், சென்ட்ரிங் சம்பளம் ரூ.800 ஆக உயர்த்த வேண்டும், பென்சன் திட்டத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும், கட்டிட தொழிலாளர்கள் வேலை நேரத்தை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பதிவு செய்ய வேண்டும், கட்டிட தொழிலாளர் நல வாரியத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும், தொழிலாளர்கள் வாரிசுகளின் திருமண உதவி தொகையை ரூ.50 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertising
Advertising

Related Stories: