×

ஊட்டி அருகே குடிநீர் வசதி செய்து தரக்கோரி கலெக்டரிடம் மனு

ஊட்டி, ஜூலை 16:ஊட்டி நஞ்சநாடு அருகேயுள்ள நரிகுளி ஆடா பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தர கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
 ஊட்டி நஞ்சநாடு அருகே நரிகுளிஆடா கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர், நேற்று கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:  நஞ்சநாடு அருகேயுள்ள நரிகுளி ஆடா கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். நாங்கள் கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக இப்பகுதியில் இயற்கையாக உற்பத்தியாக கூடிய ஊற்று நீரை பயன்படுத்தி வந்தோம். தற்போது வறட்சி காரணமாக ஊற்று நீர் வற்றி விட்டதால், குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். எனவே எங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.  மேலும் எங்கள் கிராமத்தில் உள்ள மாணவ, மாணவியர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க பயிற்சி எடுத்து கொள்வதற்கு விளையாட்டு மைதானம் இல்லை. எனவே எங்கள் கிராம பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதில் விளையாட்டு மைதானம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Tags :
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்