திறக்கப்படாத விஏஓ., அலுவலகம் இரவில் சமூக விேராதிகள் கூடாரம்

ஊட்டி, ஜூலை 16:  ஊட்டி அருகேயுள்ள காந்திபேட்டை பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் பல ஆண்டாக திறக்கப்படாமல் உள்ளதால், பழுதடைந்து மக்களுக்கு பயனற்று கிடக்கிறது.  ஊட்டி அருகேயுள்ள காந்திபேட்டை பகுதியில் ஊட்டி - மஞ்சூர் முக்கிய சாலையின் ஒரத்தில் 2003-04 ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.70 ஆயிரம் மதிப்பில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கட்டப்பட்டது. கிராம நிர்வாக அலுவலகம் கட்டி பல ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. ஆனால், கட்டப்பட்ட நாள் முதல் இதுவரை கிராம நிர்வாக அலுவலகம் திறக்கப்படாமல் செடிகள் வளர்ந்து பாழடைந்து காணப்படுகிறது. மேலும், அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கிடக்கிறது.
 மேலும் கதவுகள் துருப்பிடித்து உடைந்து காணப்படுகிறது. அலுவலகத்தை சுற்றிலும் உள்ள பகுதிகளை பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இந்த கட்டிடம் உள்ளது.மஞ்சூரில் காமராஜர் பிறந்தநாள் விழா
மஞ்சூர், ஜூலை 16: குந்தா வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மஞ்சூரில் குந்தா வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில், காமராஜரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வட்டார  தலைவர் நேரு தலைமை தாங்கினார். பேரூராட்சி கமிட்டி தலைவர் ராஜ்குமார்,  வெங்கிட்டுசாமி, மூர்த்தி, வாசுதேவன், நாகராஜ் உள்ளிட்டோர் முன்னிலை  வகித்தனர். முன்னதாக
பஜாரில் உள்ள காமராஜர் மைதானத்தில்  கொடியேற்றப்பட்டது.

இதை தொடர்ந்து மஞ்சூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப  பள்ளியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு நோட்டு,  புத்தகங்கள், எழுது பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.  இந்நிகழ்ச்சியில்  கட்சி நிர்வாகிகள் சதீஷ், கண்ணன், சந்திரன், சிவக்குமார், போஜன், வீராசாமி,  சிவராஜ், ராஜூபெட்டன், ராஜன், முருகேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து  கொண்டனர். இதேபோல் பிக்கட்டி, கிண்ணக் கொரை, எடக்காடு, பெங்கால்மட்டம்,  கைகாட்டி பகுதிகளிலும் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கொடியேற்றி  பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Tags :
× RELATED குந்தா பகுதியில் சுற்றுலா அடிப்படை...