மாவட்ட செஸ் போட்டி 25 மாணவர் பங்கேற்பு

ஊட்டி, ஜூலை 16: மாவட்ட  சதுரங்க சங்கம் மற்றும் யுனிக் பள்ளி சார்பில் ஊட்டியில் உள்ள யுனிக்  பப்ளிக் பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடந்தது.    ஊட்டியில்  உள்ள யுனிக் பப்ளிக் பள்ளி மற்றும் மாவட்ட சதுரங்க சங்கம் ஆகியவை இணைந்து  ஊட்டியில் உள்ள யுனிக் பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகளை  நடத்தியது. இதில், மாவட்டத்தில் உள்ள 25 பள்ளிகளை சேர்ந்த 345 மாணவ,  மாணவிகள் கலந்து கொண்டனர். 11 வயது, 13 வயது, 15 வயது மற்றும் 19 வயது என  நான்கு பிரிவின் கீழ் போட்டி நடந்தது.
 இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி செயலாளர் நந்தீஷ்வரன் சான்றிதழ், பதக்கம் மற்றும் கேடயம் ஆகியவை வழங்கினார். இதில், பள்ளி  முதல்வர் காயத்ரி, நீலகிரி சதுரங்க சங் செயலாளர் பஷீர் அகமது ஆயோர்  கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தென்மேற்கு பருவ மழையால்...