ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஊட்டி, ஜூலை 16:  தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற  ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகஸ்ட் 9ம் ேததி காலை 10.30 மணியளவில் ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. எனவே 30.06.2019க்கு முன்னர் ஓய்வு பெற்று இதுநாள் வரை ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய பலன்கள் கிடைக்க பெறாதவர்கள் தங்களது குறைகள் பற்றிய விண்ணப்பங்களை இரட்டை பிரதிகளில் தயார் செய்து மாவட்ட கலெக்டர் அல்லது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) ஆகியோருக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வரும் 26ம் தேதிக்கு முன்பு அனுப்பி வைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்கள் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

Tags :
× RELATED வறட்சி எதிரொலி வனப்பகுதிகளில் காட்டு தீ பரவும் அபாயம்