வீடுகளை பழுதுபார்த்து தர கோரி மனு

ஊட்டி, ஜூலை 16: குன்னூர் அருகேயுள்ள பால்மராலீஸ், மருதங்கோம்பை பகுதியை சேர்ந்த இருளர் பழங்குடியின மக்கள் நேற்று ஊட்டியில் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பால்மராலீஸ் அடுத்துள்ள மருதங்கோம்பை பகுதியில் இருளர் பழங்குடியின மக்கள் பல ஆண்டாக வசித்து வருகிறோம். இங்கு 10 குடும்பங்கள் வசித்து வருகிறோம். அரசு சார்பில், எங்களுக்கு கட்டி கொடுக்கப்பட்ட வீடுகள் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. எனவே வீடுகளை பழுது பார்த்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்

Tags :
× RELATED வறட்சி எதிரொலி வனப்பகுதிகளில் காட்டு தீ பரவும் அபாயம்