குடிசைமாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக ரூ.24 லட்சம் ேமாசடி மீன் வியாபாரி கைது


கோவை, ஜூலை 16: கோவையில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக 24 லட்ச ரூபாய் ஏமாற்றிய மீன் வியாபாரியை போலீசார் கைது செய்தனர். ேகாவை செல்வபுரம் எஸ்.எல்.சி லே அவுட் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (40). மீன் வியாபாரி. இவருக்கும் கரும்புக்கடை சாரமேடு பகுதியை சேர்ந்த மீன் வியாபாரியான பைரோஸ்கான் (27) என்பவருக்கும் சில ஆண்டாக தொழில் ரீதியான நட்பு உள்ளது. பைரோஸ்கான், குடிசை மாற்று வாரியத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி வீடு வாங்கி தருவதாகவும், ஏற்கனவே உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில் சிலருக்கு வீடு வாங்கி தந்திருப்பதாகவும் சரவணனிடம் கூறியுள்ளார். 1 லட்ச ரூபாய் கொடுத்தால் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை சந்தித்து வீடு ஒதுக்கீடு டோக்கன் பெற்று தருவேன், நகரில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடியில் உடனடியாக வீடு கிடைக்கும் எனக்கூறியுள்ளார். இதை தொடர்ந்து சரவணன், அவருக்கு பழக்கமான லட்சுமணன் உட்பட 24 பேர் பைரோஸ்கானிடம் தலா 1 லட்ச ரூபாய் கொடுத்துள்ளனர். 24 லட்ச ரூபாய் வாங்கிய பைரோஸ்கான் கடந்த 14ம் ேததி செல்வபுரத்தில் சரவணனுக்கு வீடு ஒதுக்கீட்டிற்கான டோக்கன் ெகாடுத்தார். இந்த டோக்கனை பெற்ற சரவணன், செல்வபுரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்திற்கு சென்று வீடு கேட்டார். அப்போது டோக்கன் போலியாக அச்சடிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் தாங்கள் ேடாக்கன் தரவில்லை என குடிசை மாற்று வாரியத்தினர் கூறினர். இது தொடர்பாக சரவணன், பைரோஸ்கானிடம் விசாரித்தார். வீடு தராவிட்டால் வாங்கிய பணத்தை திருப்பி கொடு எனக்கேட்டுள்ளார். இதில் கோபமடைந்த பைரோஸ் கான், சரவணனை தாக்கி மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக சரவணன் அளித்த புகாரின் பேரில், செல்வபுரம் போலீசார் பைரோஸ்கான் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Tags :
× RELATED மாவட்டத்தில் தேர்தல் நடக்கும்...