×

வைகை அணையை தூர்வார வேண்டும்

தேனி, ஜூலை 16: வைகை அணையை தூர்வார வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேற்று தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜப்பன், ஜெயராஜ், முருகன், பாண்டியன்,சேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தின்போது, வைகை அணையினை தூர்வாரி, அங்கிருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக அள்ளிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து, முக்கிய நிர்வாகிகள் கலெக்டர் பல்லவிபல்தேவை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது: வைகை அணையில் மொத்தமுள்ள 71 அடியில் 20 அடி ஆழத்திற்கு வண்டல் மண் நிரம்பியுள்ளது. இதனால் தண்ணீர் கொள்ளளவு 51 அடிதான் உள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என 5 மாவட்ட விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், வைகை அணையை தூர்வார உரிய நிதியை ஒதுக்கிட வேண்டும். அணைப்பகுதியில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக தோட்டங்களுக்கு எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை