×

தேனியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் குண்டலை அணைக்கட்டில் சோலார் கருவிகள் கேமராக்கள் திருட்டு மோப்பநாய் உதவியுடன் போலீஸ் தேடுதல் வேட்டை

மூணாறு, ஜூலை 16: மூணாறில் முக்கிய சுற்றுலாத் தலமான குண்டலை அணைக்கட்டில் பொருத்தப்பட்டிருந்த சோலார் கருவிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூணாறு அருகே குண்டலை அணைகட்டு உள்ளது. இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக குண்டலை அணைக்கட்டு கருதப்படுகிறது. தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த அணையை பார்வையிடவும், படகு சவாரி மேற்கொள்ளவும் வருகின்றனர். அப்படி வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கேரளா சுற்றுலாத்துறை  கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சோலார் மின்விளக்குகளை அமைத்தது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அணையில்  அமைக்கப்பட்டிருந்த சோலார் கருவிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மாயமானது. குண்டலை அணைப்பகுதியில் கேரள ஹைடேல் சுற்றுலாத் துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள துலீப் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த சோலார் கருவிகள் காணாமல் போனதையறிந்த சுற்றுலாத் துறை ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மோப்ப நாய்கள் உதவியுடன் குற்றவாளிகளை பிடிக்க  மூணாறு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் துலீப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பூங்கா ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Tags :
× RELATED மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா