×

வெயிலின் தாக்கம் இருக்கும் பெரியகுளம் பகுதியில் மழை சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து

பெரியகுளம், ஜூலை 16: பெரியகுளம் சோத்துப்பாறை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து ரத்துவங்கியுள்ளது. பெரியகுளம் அருகே 8 கி.மீ.தொலைவில் சோத்துப்பாறை அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 126 அடியாகும். கொடைக்கானல் மற்றும் பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை காரணமாக சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து இருக்கும்.
கடந்த சில நாட்களாக மழையின்றி சோத்துப்பாறை அணையில் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது. இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து வரத் துவங்கியது. அணைக்கு வரும் நீர்வரத்து 8 கனஅடியாகவும், அணையின் நீர் இருப்பு 27.08 மில்லியன் அடியாகவும் உள்ளது. அணையிலிருந்து குடிநீருக்காக 3 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags :
× RELATED இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு