×

பூச்செடிகளைக் காப்பாற்ற லாரி தண்ணீர் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

ஆண்டிபட்டி, ஜூலை 16: ஆண்டிபட்டி அருகே உள்ள ஏத்தக்கோயில் கிராமத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஆழ்துளை மற்றும் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக ஊராட்சி நிர்வாகத்தினர் சார்பில் குடிநீர் வழங்கி வந்தனர். ஆனால் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சினால் ஆழ்துளை கிணறுகள் பழுதானதாலும் கூட்டு குடிநீர் சீராக வராததால் கிராமத்திற்கு கடந்த பல மாதங்களாக குடிநீர் முறையாக விநியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அக்கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று ஆண்டிபட்டி பஸ்நிலையத்தில் இருந்து ஊர்வலமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்றனர். அங்கு அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தகவலறிந்த உதவி இயக்குனர் முருகன், வட்டாட்சியர் சந்திரசேகர், பிடிஓ ஆண்டாள் ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்த பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குடிநீர் பிரச்னை தீர்க்க வலியுறுத்தி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. ஒரு நாளைக்கு கூலி வேலைக்கு சென்றால் 200 ரூபாய் கிடைக்கிறது. அதை வாங்கி 150 ரூபாயை குடிநீருக்கு பயன்படுத்த வேண்டிய உள்ளது. இதனால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்றனர்.

Tags :
× RELATED மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா