×

மாவட்டம் ஆக்கிரமிப்பில் சிக்கியதால் 143 ஏக்கர் கண்மாய் 10 ஏக்கராக சுருங்கியது

வருசநாடு, ஜூலை 16: மயிலாடும்பா மயிலாடும்பாறை அருகே குறுகிப்போன செங்குளம் கண்மாய் மயிலாடும்பாறை அருகே நரியூத்து ஊராட்சிக்கு உட்பட்டது செங்குளம் கண்மாய். சுமார் 143 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த கண்மாயை நம்பி ஏராளமான விவசாயிகள் உள்ளனர். ஆனால், தனிநபர்கள் ஆக்கிரமித்ததால் கண்மாய் தற்போது 10 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே உள்ளது.கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதி விவசாயிகள் பலமுறை மனு அளித்துள்ளனர். அத்துடன் கரைகளைப் பலப்படுத்தி கண்மாயை பாதுகாக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இதுகுறித்து விவசாயி கருப்பையா கூறுகையில், `` சில ஆண்டுகளாக செங்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்பு பெருகிக் கொண்டே போகிறது. கண்மாயில் நீரை தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்க வேண்டும் என்று அதிகாரிகள் நினைக்கவில்லை. இதன் காரணமாக கண்மாய் காணாமல் போய் கொண்டிருக்கிறது.செங்குளம் கண்மாய் மட்டுமின்றி கடமலை - மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கண்மாய்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இப்படி செய்தாலே குடிநீர் பஞ்சம் ஏற்படாது’’ என்றார்.இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டதற்கு, `` கடமலை - மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரப்படும்’’ என்று கூறினர்.

Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...