×

திருப்புத்தூர் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருப்புத்தூர், ஜூலை 16:  திருப்புத்தூர் பொக்கிசமா காளியம்மன், மகா முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. திருப்புத்தூர் மேலரத வீதியில் அமைந்துள்ள பொக்கிசமா காளியம்மன் கோவிலில் பரிவார தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன. காளியம்மன், முனீஸ்வரர் மற்றும் வில்வ விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களின் மூலஸ்தான விமானங்கள் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, மகா கணபதி, நவக்கிரஹ ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனைகள் நடைபெற்றன. சனிக்கிழமை முதல் கால யாக பூஜையும், தீபாராதனைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜையும் மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றன. மேலும் சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து நேற்று காலையில் 4ம் கால யாக பூஜை, மகா பூர்ணாகுதியும், அதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடும் நடைபெற்றன. தொடர்ந்து 9.45 மணிக்கு விமானத்தில் உள்ள கோபுர கலசத்தில் வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்களால் யாகம் செய்யப்பட்ட புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாக தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றன. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்னர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...