லேப்டாப் வழங்கும் விழா

சோழவந்தான், ஜூலை 16: சோழவந்தான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச லேப்டாப் வழக்கும் விழா நடைபெற்றது. தலைமையாசிரியை திலகவதி தலைமை வகிக்க, அதிமுக ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி, பேரூர் செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தனர். முள்ளிப்பள்ளம் பள்ளி தலைமையாசிரியர் கபிலன் வரவேற்றார். விழாவில் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசஞ் சண்முகனார் மேல்நிலைப்பள்ளி, முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி, மேலக்கால் மற்றும் அய்யப்பநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 1390 மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்களை மாணிக்கம் எம்எல்ஏ வழங்கினார். தொடர்ந்து எம்எல்ஏ, நாச்சிகுளம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியி மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்கள் வழங்கினார்.

Advertising
Advertising

Related Stories: