லோக் அதாலத்தில் ரூ.31 கோடிக்கு தீர்வு

மதுரை, ஜூலை 16: மதுரை மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத்தில் ரூ.31 கோடிக்கு தீர்வு ஏற்பட்டது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீமாபானு தலைமையில் மெகா ேலாக் அதாலத் நடந்தது. இதேபோல், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் சார்பில் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மெகா லோக் அதாலத் நடந்தது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 18 அமர்வுகளில் விசாரணை நடந்தது. மொத்தமாக 2918 வழக்குகளில் ரூ.31 கோடியே 48 லட்சத்து 88 ஆயிரத்து 288க்கு தீர்வு ஏற்பட்டது. இதில், முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி தாண்டவன் தலைமையிலான அமர்வில் நீண்ட நாளாக நிலுவையில் உள்ள பாகப்பிரிவினை தொடர்பான சிவில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதில், ரூ.9 கோடியே 85 லட்சத்து 16 ஆயிரத்து 829க்கு தீர்வு ஏற்பட்டது. இதில் சட்டப் பணிகள் ஆணைய நீதிபதி முத்துகுமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: