வீடு புகுந்து தொழிலாளி குத்தி கொலை

மதுரை, ஜூலை 16: மதுரை அருகே முன்விரோத தகராறில் வீடு புகுந்து தொழிலாளியை குத்திக் கொலை செய்த 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடுகின்றனர்.   மதுரை சிலைமான் அருகே இளமனூரை சேர்ந்தவர் காஞ்சிவனம் (55). தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி (48). காஞ்சிவனத்துக்கும், அதே ஊரை சேர்ந்த வக்கீல் கருப்பசாமி என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன் அய்யனார் கோயில் விழாவின் போது மோதல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை காஞ்சிவனம் குடும்பத்துடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது கருப்பசாமி உள்பட 10 பேர் கொண்ட கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்து காஞ்சிவனத்தை சரமாரியாக குத்தியது. கணவரை காப்பாற்ற வந்த தனலட்சுமியையும் குத்தி விட்டு கும்பல் தப்பியது. இதில் சம்பவ இடத்தியிலேயே காஞ்சிவனம் உயிரிழந்தார். காயமடைந்த தனலட்சுமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சிலைமான் போலீசார் கருப்பசாமி உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: