மீனாட்சி கோயிலில் இன்று நடையடைப்பு

மதுரை, ஜூலை 16: சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு 1.32 மணிக்கு துவங்கி மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு முடிகிறது. இதனால் இன்று மாலை 6.30 மணிக்கு நடை சாத்தப்படும். இதுபோன்று மீனாட்சியம்மன் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள 22 துணை கோயில்களிலும் இன்று மாலை முதல் நடையடைக்கப்படுகிறது.இதையொட்டி மதுரை மீனாட்சியம்மன், சுவாமி மூலஸ்தானம் கதவுகள் அடைக்கப்படும். அந்த நேரத்தில் பொதுமக்கள் அம்மன், சுவாமிக்கு அர்ச்சனை, தரிசனம் செய்ய இயலாது. கிரகணம் நாளை (ஜூலை 17) அதிகாலை 4.30 மணிக்கு முடிந்ததும் தீர்த்தம் வழங்கப்பட்டு அம்மன், சுவாமி சன்னதிகளில் கிரகண கால அபிஷேகம், சந்திரசேகர் இரண்டாம் பிரகாரம் புறப்பாடு நடக்கும். நாளை அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு அர்த்த ஜாமபூஜை, பள்ளியறை பூஜை வழக்கம்போல் நடைபெறும். இத்தகவலை இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதுபோன்று திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்களிலும் இன்று நடை அடைக்கப்படுகிறது.

Related Stories: