இலவச வீட்டு மனை பட்டா கோரி தாலுகா அலுவலகத்தில் மனு

கடையநல்லூர், ஜூலை 16: ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர். கடையநல்லூர் தாலுகா போகநல்லூர், சொக்கம்பட்டி, நயினாரகரம் சமத்துவபுரத்திற்கு  மேல்பகுதியில் உள்ள பரம்பு நிலம், கடையநல்லூர் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டாவாக பிரித்து வழங்க வேண்டும். சொக்கம்பட்டி கிராமத்திற்குட்பட்ட ஆவரந்தான் குளத்து கரையில் குமந்தாபுரத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டு இடத்தை ஆக்ரமிப்பு செய்து தண்ணீர் வியாபாரம் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Advertising
Advertising

நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூ. விவசாய சங்க வட்டார செயலாளர் அருணாசலம் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் கணேசன், செய்யது அலி முன்னிலை வகித்தனர்.  மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன், சுப்பையா, தங்கவேலு, முத்துசாமி, கணேசன், சரஸ்வதி, சம்சுதீன், ஆறுமுகம், வைரமுத்து, சுடலை, ராமையா, மாடசாமி, பிச்சையா, துரை, பரமசிவன், கார்த்திக் சரவணன், கல்வத் உள்ளிட்ட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தாசில்தார் அழகப்பராஜாவிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

Related Stories: