இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனைவியை அவதூறாக பேசிய தந்தைக்கு சரமாரி வெட்டு

கடையம், ஜூலை 16: கடையம் அருகே வெய்க்காலிபட்டி அருந்ததியர் காலனி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இசக்கி (60). இவரது மகன் சின்னதம்பி (40), கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி. நேற்று முன்தினம் மாலை இசக்கி, தனது மருமகள் செல்வியிடம் குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் செல்வி, நீங்களே எடுத்து குடியுங்கள் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இசக்கி, மருமகளை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வி, தனது கணவரிடம் கூறி கதறி அழுதார். இதுகுறித்து சின்னதம்பி, தனது தந்தையிடம் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சின்னதம்பி, அரிவாளால் இசக்கியை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு கால் மற்றும் தலையில் வெட்டு விழுந்தது. அவரது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதையடுத்து சின்னதம்பி அங்கிருந்து தப்பினார். காயமடைந்த இசக்கியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து இசக்கி கொடுத்த புகாரின் பேரில்  கடையம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் வழக்கு பதிந்து சின்னதம்பியை  கைது செய்தார்.

Related Stories: