சொக்கம்பட்டி மலையில் 2வது நாளாக காட்டு தீ

கடையநல்லூர், ஜூலை16:  கடையநல்லூரை அடுத்த சொக்கம்பட்டி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இரண்டாவது நாளாக நேற்றும் மாலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. . கடையநல்லூர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழையின்றி வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் கடையநல்லூரை அடுத்த சொக்கம்பட்டிக்கும் டி.என்புதுக்குடிக்கும் இடைப்பட்ட மலைப்பகுதியான முந்தல் மலைப்பகுதியிலிருந்து சேம்புத்துநாதர் கோயில் வரை நேற்று முன்தினம் மாலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் தீ மளமளவென பரவியதால் சுமார் அரை கி.மீ தொலைவிற்கு எரிந்தது.  இதில் சில அரிய வகை மரங்கள் மற்றும் ஏராளமான கோரைப்புற்களும் கருகின. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடையநல்லூர் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் கடையநல்லூர் வனவர் அருமைக்கொடி தலைமையில் தீ தடுப்பு காவலர்கள் சுமார் 12 பேர் அடங்கிய குழுவினர் தீயை அணைத்தனர். இந்நிலையில் மீண்டும் நேற்று மாலையில் அதே பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தொடர்ந்து வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: