ெசல்போனில் அடிக்கடி பேசியதால் மனைவியை வெட்டிக் கொன்றேன் கணவர் பரபரப்பு வாக்குமூலம்

நெல்லை, ஜூலை 16: மனைவி செல்போனில் அடிக்கடி பேசியதால் வெட்டிக் கொன்றதாக அவரது கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த ஆயிரத்தான் மகன் மகாராஜன்(37). கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி (35). இவர்களுக்கு மகேஷ்ராஜா (11), ஆனந்தராஜா (10) ஆகிய 2 மகன்கள். மகாராஜனுக்கு குடிப்பழக்கம் காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் செல்வி கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார். வீட்டிற்கு வந்த பிறகு, செல்வி அவருடன் வேலை பார்ப்பவர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இது கணவர் மகாராஜனுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் எனக் கூறினார். இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக நேற்றும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மகாராஜன், அரிவாளால் செல்வியை வெட்டிக் கொலை செய்தார்.  இதுதொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாராஜனை கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனது குடிப்பழக்கத்தை கண்டித்த செல்வி, வேலைக்கு சென்று வந்த பிறகு செல்போனில் அடிக்கடி பேசினார். நான் பேசக்கூடாது என்று சொன்ன பிறகும் பேசினார். எனவே அவரது செல்போனை பிடுங்கினேன். அவர் என்னை திட்டினார். ஆத்திரமடைந்த நான் அவரை வெட்டிக் கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.
Advertising
Advertising

Related Stories: