×

வெவ்வேறு விபத்தில் 3 பேர் பலி

கடையநல்லூர், ஜூலை 16: சிங்கிலிபட்டியை சேர்ந்த சசி மகன் பன்னீர்செல்வம் (24). லாரி டிரைவரான இவர் நேற்று  முன்தினம் இரவில் சிங்கிலிபட்டியிலிருந்து புளியங்குடிக்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது எதிர்பாராதவிதமாக புன்னையாபுரம் அருகே ஒரு பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி படுகாயமடைந்தார். தகவலறிந்த சொக்கம்பட்டி போலீசார் மற்றும் தனிப்பிரிவு ஏட்டு மருது ஆகியோர்  படுகாயமடைந்த பன்னீர்செல்வத்தை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் உயிரிழந்தார். இதுகுறித்து சொக்கம்பட்டி சப்.இன்ஸ்பெக்டர் முத்துராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

சிவகிரி:  ராயகிரியை சோ்ந்த சுப்பிரமணியன் மகன் பேச்சிமுத்து (25). இன்ஜினியரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பி தந்தைக்கு உதவியாக விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார்.  பேச்சிமுத்து நேற்றிரவு ராயகிரியில் இருந்து வாசுதேவநல்லூருக்கு தனது பைக்கில் சென்றார். திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வாசுதேவநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே சென்றபோது, முன்னே சென்ற லாரியைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிரே புளியங்குடியில் இருந்து ராயகிரி நோக்கிச் சென்ற பைக் மீது மோதி, லாரிச்சக்கரத்தில் சிக்கி பேச்சிமுத்து இறந்தார். எதிரே பைக்கை ஓட்டி வந்த புளியங்குடியை சோ்ந்த முத்துப்பாண்டி மகன் மாரித்துரை(30), பைக்கின் பின்னால் அமா்ந்திருந்த புளியங்குடியை  சோ்ந்த சிலுவைதாஸ் மனைவி பூமாரி (45) இருவரும் பலத்த காயமடைந்தனா்.
செங்கோட்டை:  இடைகாலை சேர்ந்தவர் இசக்கி மகன் கருப்பசாமி (31). இவர் நேற்று மதியம் பைக்கில் தென்காசி-மதுரை ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது இடைகால் அருகே டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்,

Tags :
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி