நெல்லை மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா

களக்காடு, ஜூலை 16:  காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு களக்காட்டில் காமராஜர் சிலைக்கு அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் பிரபாகரன் மாலை அணிவித்து, இனிப்பு வழங்கினார். இதில் மாவட்ட அவைத்தலைவர் வீரபாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெரியபெருமாள், விவசாய அணி செயலாளர் முருகேசன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சேர்மபாண்டி, முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் களக்காடு ஜெயராமன், நாங்குநேரி விஜயகுமார், ராதாபுரம் அந்தோணி அமல்ராஜ், பாளை ஒன்றிய கூட்டமைப்பு முன்னாள் தலைவர் முத்துகுட்டி பாண்டியன், நகர செயலாளர்கள் களக்காடு செல்வராஜ், திருக்குறுங்குடி முருகன், ஏர்வாடி பாபு, நாங்குநேரி பரமசிவன், முன்னாள் ஜெ.பேரவை ஒன்றிய செயலாளர் பாபு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertising
Advertising

பாவூர்சத்திரம்: நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பாவூர்சத்திரத்தில் நடந்த விழாவில் முன்னாள் மாநில தலைவரும், திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட தலைவர் பழனிநாடார், மாவட்ட பொருளாளர் முரளிராஜா, வட்டார தலைவர் ஜேசுஜெகன், வைகுண்டராஜர், பால்துரை, ஆனந்த், சிவனு பாண்டியன், தங்கரத்தினம், சண்முகம், முருகேசன், சிங்க குட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். குறும்பலாப்பேரியில் நடந்த நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் மேகநாதன் தலைமை வகித்தார். தமிழ்மணி முன்னிலை வகித்தார். அயன் குறும்பலாப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளி, குறும்பலாப்பேரி டிடிடிஏ தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் முருகேசன், மலையப்பன், காமராஜ், சாமி, அருணாசலம், சங்கர், சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். அமமுக சார்பில் மாவட்ட துணை செயலர் சுமதி கண்ணன் தலைமையில் அக்கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முருகேசன், ஊராட்சி செயலர்கள் சுடலைமணி, காமராஜ்செல்லையா, தென்காசி நகர செயலாளர் துப்பாக்கிபாண்டியன், முத்துகுமார், வேலுசாமிபாண்டியன், நாகூர்மீரான்,கேசவன், திருமலைகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாவூர்சத்திரத்தில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் காய்கனி மார்க்கெட்டில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சங்கத் தலைவர் தொழிலதிபர் ஆர்.கே. காளிதாசன், பொருளாளர் எம்.எஸ்.பி.வி.பி. ராஜேஷ் சங்கர குமார் ஆகியோர் மார்க்கெட் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் எஸ்.கே.டி.பி. காமராஜ், சங்க செயலாளர் நாராயணசிங்கம், துணை தலைவர் தங்கராஜ், துணை செயலாளர்  முருகேசன், முன்னாள் செயலாளர் சுப்பிரமணியன், கல்லூரணி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அருணோதயம், முத்து புதியவன், முருகேசன், செந்தூர் பாண்டியன், கண்ணன், சாமி, மனோகர், அன்புமதி, ஜெகன், நயினார், செல்வன், முருகன், செல்வின் மணிமுத்து, அமல்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாங்குநேரி: நாங்குநேரி ஒன்றியம் ராமநேரி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காமராஜர் உருவபடம் அலங்கரித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கல்வி மேலாண்மை குழு தலைவர் இசக்கியம்மாள் தலைமை வகித்தார். அங்கன்வாடி பணியாளர் சுப்பு முன்னிலை வகித்தார். உதவி ஆசிரியை பெருமாள்குமாரி வரவேற்றார். தலைமை ஆசிரியர் பால்ராஜ், கல்விவளர்ச்சி நாள் விழா கொண்டாடப்படும் நோக்கம் குறித்து விளக்க பேசினார். விழாவையொட்டி போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் சத்துணவு அமைப்பாளர் கணேசன், உதவியாளர் சுடலி மற்றும் சுப்புலட்சுமி, மரகதம், உச்சினிமாகாளி, லட்சுமி, கோமதி, சுபசித்திரா, புவனேஸ்வரி உள்பட ஊர்மக்கள் திரளாக பங்கேற்றனர். அங்கன்வாடி பணியாளர் கோமதி நன்றி கூறினார்.

குற்றாலம் செய்யது பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாகவும்,பொதிகை தமிழ் பேரவை தொடக்க விழா புதிய மாணவர்களை வரவேற்கும் விழா என முப்பெரும் விழா நடந்தது. விழாவில் மாணவர் முகம்மது அஸ்லம் கிராஅத் ஓதினார். மாணவி சமீமா பர்வீன் தமிழாக்கம் செய்தார். பள்ளி மாணவ பாடல்குழுவினர் தமிழ்தாய் வாழ்த்து, பள்ளிப்பண் பாடினர். புதிய மாணவ,மாணவிகளை மாணவி சாந்தினி வரவேற்றார்.மாணவி மவுனிகா நன்றி கூறினார். மாணவி மர்சூகா ஆப்ரின் சிலப்பதிகாரம் பற்றி பேசினார். மாணவர் ஷபி அப்துல்லா காமராஜர் பற்றி பேசினார். பள்ளி முதல்வர் முகைதீன் அப்துல்காதர் வரவேற்புரையாற்றினார். ஆசிரியர் குமரகுருபரன் கவிதை வாசித்தார். சாகித்ய அகாடமி  விருது பெற்ற கவிஞர் நாஞ்சில் நாடன் சிறப்புரையாற்றினார்.பள்ளி முதல்வர் சிறப்பு விருந்தினருக்கு நினைவுபரிசு வழங்கி கவுரவித்தார். விழாவில் பொறியாளர் ஆதம், செய்யது வெல்பர் சொசைட்டியின் மேலாளர் ஆதம்பாவா, பள்ளி மாணவர்கள்நல ஆலோசகர் இஸ்மாயில் ஆசிரியர்கள், ஆசிரியைகள், அலுவலர்கள்மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் குமரகுருபரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியை அலிமா நன்றி கூறினார்.

முத்துமாலை அம்மன் கோயில் தல வரலாறு

முக்கூடல் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள்அந்த காலத்தில் குரங்கணியில் உள்ள முத்துமாலை அம்மனை வழிபட்டு வந்தனர். அக்காலத்தில் கொள்ளையர் இடையூறு அதிகமாக இருந்ததால் குரங்கணி சென்று வழிபட மக்கள் பயந்தனர். அதனால் முக்கூடல் இந்து நாடார் சமுதாயத்தைச் சார்ந்த பெரியவர்கள் சேர்ந்து குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் இருந்து பிடிமண் கொண்டு வந்து முக்கூடல் தாமிரபரணி வடக்கரையில் குடில் அமைத்து அம்பாளை வழிபாடு செய்து வந்தனர். அக்காலத்தில் சலவைத் தொழிலாளர்கள் துணிகளை துவைத்த பின்பு மண் தாழிகளை மணல் மீது கவிழ்த்து வைத்து மறுநாள் எடுப்பது வழக்கம். ஒரு நாள் அவ்வாறு எடுக்கும் போது ஒரு தாழியை எடுக்க முடியவில்லை. இந்த அதிசயம் எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அன்று இரவு கோயில் பூசாரி மாடக்கண் நாடார் கனவில் அம்மன் தோன்றி, தாழியை எடுக்க வேண்டாம். அங்கு நான் இருக்கிறேன் அதைச்சுற்றி கோயில் கட்டி வழிபடுங்கள் என்று கூறியதால் அவ்வாறு கோயில் கட்டி வழிபாடு செய்தனர்.

இன்றும் கர்ப்பகிரஹத்தில் அம்பாள் அருகே உள்ள தாழிக்கும் பூஜை நடைபெறுகிறது. சிலை வரலாறு: சிலகாலம் கழித்து அம்பாளுக்கு சிலை அமைக்க முடிவு செய்தனர். அப்போது கோயில் பூசாரி மாடக்கன் நாடார் கனவில் அம்பாள் தோன்றி பக்கத்தில் உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தில் மேற்கு பகுதியில் குறிப்பிட்ட ஒரு வயலில் எனது சிலை புதைந்துள்ளது. அங்கு சென்றால் வானத்தில் கருடன் வட்டமிட்டு நிழல் காட்டும் இடத்தில் தோண்டினால் சிலை கிடைக்கும் என்று கூறியது. அதே சமயத்தில் வயல் சொந்தக்காரர் கனவில் அம்பாள் தோன்றி வயலை தோண்டி சிலை எடுப்பதை தடை செய்ய வேண்டாம் என்று கூறியது. அம்மன் சொன்னபடி கருடன் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து தற்போது வழிபட்டு வரும் கருங்கல் சிலை சுயம்புவாக கிடைத்தது. அந்த சிலையை பூஜை செய்து பக்தியுடன் முக்கூடலுக்கு கொண்டு வந்து மண்தாழிக்கு அருகில் சிலையை வைத்து ஆகம விதிப்படி பிரதிஷ்டைசெய்து வழிபாடு செய்து வருகின்றனர்.  முக்கூடல் இந்து நாடார் மக்கள் இக்கோயிலை 150 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: