திருச்செந்தூர் ரயிலடி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா

உடன்குடி, ஜூலை 16: திருச்செந்தூர் ரயிலடி ஆனந்த விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் ரயிலடி ஆனந்த விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா, நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம்,  தொடர்ந்து லட்சார்ச்சனை,  நவக்கிரக குரு பூஜை, 108 சங்கு பூஜை, ஹோமம், தீபாராதனை, காலை 10 மணிக்கு  விமானஅபிஷேகம், ஆனந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் கும்பாபிஷேகம் நடந்தது. மாலை 6 மணி முதல் லட்சார்ச்சனை, இரவு 7.45  மணிக்கு பிரசன்ன பூஜை, புஷ்பாஞ்சலி, தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ரயிலடி ஆனந்த விநாயகர் கோயில்  நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: