தேரிப்பனை தோட்டத்தில் வாழைத்தார்கள் திருட்டு

சாத்தான்குளம், ஜூலை 16: சாத்தான்குளம் அருகே உள்ள அச்சம்பாடு, தேரிப்பனை பகுதியில் தோட்டத்தில் ஒன்றிய அதிமுக செயலாளர் அச்சம்பாடு சவுந்திரபாண்டி, அவரது சகோதரர் முருகேசன் உள்ளிட்ட விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். இதில் முருகேசன் தோட்டத்தில் 1500 வாழைகள் நட்டு பராமரித்து வருகிறார்.   வாழைகள் குலை தள்ளி அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், நேற்று காலை தோட்டத்துக்கு சென்றபோது 50க்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Advertising
Advertising

Related Stories: