நூறு நாள் வேலை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு

திண்டுக்கல், ஜூலை 16: நூறு நாள் திட்டத்தில் பணிகள் வழங்க வேண்டுமென வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் திண்டுக்கல் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர். வேடசந்துார் ஊராட்சி ஒன்றியம் இ.சித்துார், ராமபுரம் ஊராட்சிகளில் கடந்த இரண்டு மாதங்களாக நுாறு நாள் திட்டத்தில் பணிகள் எதுவும் நடக்கவில்லை. இதுபோல் மாவட்டத்தில் சுய ஊராட்சிகளில் பாதி வேலை நடந்தும், நடக்காமல் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மழை குறைவால் வறட்சியாலும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய தொழிலாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர். குடிநீர் கூட பல கிராமங்களில் விலைக்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அனைத்து ஊராட்சிகளிலும் நுாறு நாள் பணிகளை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் பிழைப்பிற்கு சிறிதளவு பணம் கிடைக்கும் என கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் பரிந்துரை செய்தார்.

Related Stories: