ஆணி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு 500 லிட்டர் பால் அபிஷேகம்

செம்பட்டி, ஜூலை 16: ஆணிமாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு 500 லிட்டர் பாலில் சிறப்பு அபிஷேகம் செய்தனர். கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நவகிரஹ ஹோமம், பஞ்ச சூத்த ஹோமம், 1008 சரஸ்கரநாம ஹோமம் நடைபெற்றது. சின்னாளபட்டி மேட்டுப்பட்டியில் அமைந்துள்ளது அருள்மிகு அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில். 16 அடி உயரத்தில் நின்ற நிலையில் தன்னை வணங்க வரும் பக்தர்களை வணங்குவது போல் சிலை அமைந்திருப்பது தனிசிறப்பு.

இந்தியாவிலேயே சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயருக்கு மட்டும் 21 வகை சிறப்பு அலங்காரங்கள் செய்வதுண்டு. குறிப்பாக சரபோஜி மன்னர் அலங்காரம், கரும்பு காப்பு அலங்காரம், பழக்காப்பு அலங்காரம், வெண்ணெய் காப்பு அலங்காரம், பாலமாருதி அலங்காரம், சுயம்பு திருமேனி அலங்காரம், வயோதிக மாருதி அலங்காரம், பஞ்சமுக அலங்காரம், தியான மாருதி அலங்காரம், திருப்பதி ஏழுமலையான் அலங்காரம் உட்பட 21 வகை சிறப்பு அலங்காரங்கள் செய்வதுண்டு. ஆணி மாதம் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு 500 லிட்டர் பாலாபிஷேகத்துடன் பால், தயிர், நல்லெண்னெய், இளநீர், மாபொடி, திரவியப்பொடி, தேன், சந்தனம், உட்பட 16 வகை அபிஷேகம் நடைபெற்றது.
Advertising
Advertising

முன்னதாக வருடாபிஷேகத்தை முன்னிட்டு நவகிரக ஹோமம், சுதர்சன ஹோமம், 1008 சகஷ்ரநாம ஹோமம் நடைபெற்றது. சுவாமிக்கான அலங்காரத்தை கோவில் தலைமை குருக்கள் சுந்தராஜ பட்டாச்சாரியார் சிறப்பாக செய்திருந்தார். வழிபாடு செய்ய வந்த பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

    விகாரி வருடம் ஆனி மாதம் 31ம் நாள், செவ்வாய்க்கிழமை, வளர்பிறை.

    திதி: பௌர்ணமி  மறுநாள் பின்னிரவு 3.40 மணி வரை; அதன் பிறகு தேய்பிறை பிரதமை.     

    நட்சத்திரம்: பூராடம் இரவு 9.52 மணி வரை; அதன் பிறகு உத்திராடம்.

    யோகம்: சித்தயோகம்.

    நல்லநேரம்: காலை 8-9, மதியம் 12-1, இரவு 7-8.

    ராகுகாலம்: மாலை 3.00 முதல் 4.30 மணி வரை.

    எமகண்டம்: காலை 9.00 முதல் 10.30 மணி வரை.

    பௌர்ணமி விரதம்.

Related Stories: