குஜிலியம்பாறையில் உள்ள வறட்டாறு ஓடையில் ஆக்கிரமிப்பு அகற்றம் கலெக்டர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர் நடவடிக்கை

குஜிலியம்பாறை, ஜூலை 16: குஜிலியம்பாறையில் தனி நபர் சிலர் வறட்டாறு ஓடையில் ஆக்கிரமித்த பாதையை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதன் பேரில், வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.

குஜிலியம்பாறை மின்வாரிய அலுவலகம் எதிரே மெயின்ரோட்டில் உள்ள வறட்டாறு ஓடையில் தனியார் இடத்திற்கு சென்று வருவதற்கு ஓடையின் குறுக்கே தனிநபர் சிலர் பாதை அமைத்து ஆக்கிரமித்தனர். இந்த ஆக்கிரமிப்பு காரணமாக மழைபெய்யும் நாட்களில் இந்த வறட்டாற்று ஓடை வழியே, சின்னக்குளம் மற்றும் பெரியகுளங்களுக்கு மழைநீர் சீராக செல்ல முடியாத நிலை இருந்தது. எனவே நீர்நிலைகளில் உள்ள இந்த ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஜூலை 9ந் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து முதற்கட்டமாக வறட்டாற்றில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அளவீடு குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு, குஜிலியம்பாறை வருவாய்த்துறையினர் அறிக்கை அனுப்பினர். இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு பாதையை அகற்ற மாவட்ட கலெக்டர் விஜயலெட்சுமி உத்தரவிட்டார். மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், குஜிலியம்பாறை தாசில்தார் காளிமுத்து நேற்று வறட்டாறு ஓடையில் இருந்த ஆக்கிரமிப்பு பாதையை அகற்றி நடவடிக்கை எடுத்தார்.

Related Stories: