மாவட்டம் முழுவதும் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

திண்டுக்கல், ஜூலை 16: முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் பல்வேறு கட்சிகள் மற்றும் சங்கங்கத்தினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு, திண்டுக்கல் வாழ் அனைத்து நாடார் சங்கம் சார்பில் ரவுண்ட் ரோடு பகுதியில் இருந்து பேரணியாக வந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். பேரணியில் காமராஜரை நினைவுகூறும் வகையில் அவர் கட்டிய காமராஜர் அணை போன்ற மாதிரி அணை அமைத்து அதிலிருந்து நீர் வருவது போன்று ஊர்வலத்தில் ஒரு வேனில் கொண்டு வந்தனர். இதில் தலைவர் சங்கரலிங்கம், செயலாளர் சிற்றம்பல நடராஜன் உள்ளிட்ட பல்வேறு நாடார் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சொக்கலிங்கம் தலைமையில், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் துணைத் தலைவர்கள் அரபு முகமது, ஜபருல்லா, முன்னாள் மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் முகமது சித்திக், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரேணுகோபால், சிவாஜி, மாவட்ட துணை தலைவர் ராஜாஜி, மகிளா காங்கிரஸ் மாநில இணை செயலாளர் நாகலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ் மாநில காங்கிரஸ் திண்டுக்கல் மாநகர தலைவர் ரதீஷ் தலைமையில், மாவட்ட தலைவர் ராமதாஸ் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் மாநில செயலாளர் மச்சக்காளை, கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இதன் துணை அமைப்புக்கள் சார்பில் மாவட்ட செயலாளர் அன்பரசு, மாநில துணை செயலாளர் திருச்சித்தன் தலைமையில், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில துணை செயலாளர் தமிழ்முரசு, மாவட்ட தொண்டர் அணி தலைவர் ரமேஷ், செய்தி தொடர்பாளர் ஸ்வீட் ராஜா, ஒன்றிய செயலாளர் பாலன், திண்டுக்கல் நிர்வாகி ஹைதர்அலி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து திண்டுக்கல் பேகம்பூர், பூச்சிநாயக்கன்பட்டியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தேசிய ஒருமைப்பாடு இயக்கம் சார்பில் காமராஜர் படத்திற்கு மலர் தூவி, குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் இனிப்புகளை மாநிலத் தலைவர் அப்துல் ஜப்பார் வழங்கினார்.

இதில் காந்தி மன்ற நிர்வாகிகள் தம்பிதுரை, ராமலிங்கம், ஜக்கிரியா, காங்கிரஸ் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ஜெகநாதன், பள்ளித் தலைமை ஆசிரியர் லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் முன்னாள் முதல்வர் காமராஜரின் 117வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கொடைக்கானல் வில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 117வது பிறந்த நாள் விழா நடந்தது. இந்த விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் மாரிஸ் தலைமை தாங்கினார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக காமராஜரின் திருஉருவ படத்திற்கு ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் அஞ்சலி செத்தினார்கள்.

குஜிலியம்பாறை:

குஜிலியம்பாறையில் அப்துல்கலாம் சேவை மையம் சார்பில் காமராஜர் 117வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. குஜிலியம்

பாறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த விழாவில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 55 மாணவ, மாணவிகளுக்கு, அப்துல்கலாம் சேவை மைய நிர்வாகிகள் இலவச நோட்டுகள், பென்சில், ரப்பர், வாய்பாடு, வினாவிடை புத்தகம் மற்றும் இனிப்புகளை வழங்கினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியை அமுதா, சேவை மைய செயலாளர் ராஜ்குமார், நிர்வாகிகள் பாஸ்கர், செந்தில்குமார், கார்த்தி, மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி, நாகணம்பட்டி, பாரதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் கல்வித் தந்தை கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா, கல்வி வளர்ச்சித் திருவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு முன்னாள் தலைமை ஆசிரியர் (ஓய்வு) கே.ரெங்கநாதன் தலைமை வகித்தார். பள்ளி செயலர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தனர். முன்னதாக சமூக ஆர்வலர் சந்திரசேகரன் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார். இவ்விழாவில் பாலமுருகன், செல்லத்துரை, ஆறுமுகம் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள், கலந்துகொண்டனர்.

Related Stories: