திண்டுக்கல்-மதுரை சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் துர்நாற்றம், தொற்றுநோய் பரவும் அபாயம்

திண்டுக்கல், ஜூலை 16: திண்டுக்கல்லில் கழிவுநீர் சாலையில் ஓடுவதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்-மதுரை சாலையில் உள்ள பேகம்பூர் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் மதுரை வழியாக செல்லும் பேருந்துகள் பேகம்பூரை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த சாலையில் ஒரு சிறிய மழை பெய்தாலும் மழை பெய்து முடிந்தவுடன் அந்த சாலையில் யாரும் செல்ல முடியாது. ஏனென்றால் ஓடையிலிருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடும். அந்த நேரத்தில் அப்பகுதியே கழிவுநீராலும், குப்பைகளாலும் சூழ்ந்து இருக்கும். பேருந்துகள் அவ்வழியே செல்லும் போது கழிவுநீரை மக்கள் மீது வாரி இறைத்துவிட்டு செல்லும். இதனாலேயே பொதுமக்கள் அவ்வழியே செல்லாமல் சுற்றி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.தற்போது பேகம்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனை முன்பு கழிவுநீர் ஓடையிலிருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியே செல்லும் பொதுமக்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அனைவரும் நோய் பரவும் நிலையில் உள்ளனர்.

 இதுகுறித்து எத்தனையோ முறை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினர்.

Related Stories: