கொடைக்கானல் நாயுடுபுரம் திரு இருதய ஆண்டவர் தேர் திருவிழா

கொடைக்கானல், ஜூலை 16: கொடைக்கானல் நாயுடுபுரத்தில் உள்ள திரு இருதய ஆண்டவர் ஆலய தேர் திருவிழா நடைபெற்றது.

கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் உள்ள திரு இருதய ஆண்டவர் கோவில் திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து நவநாள் திருப்பலி பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் மாலை திருவிழா திருப்பலி நடந்தது. இந்த திருவிழாவிற்கு பாக்கியபுரம் பங்குத்தந்தை சேவியர் அருள் ராயன் தலைமை தாங்கி நடத்தினார்.இதையடுத்து திரு இருதய ஆண்டவர் மின்அலங்கார தேர்பவனி இந்த பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக நடந்தன. இதையடுத்து நேற்று கொடியிறக்கமும், நற்கருணை ஆசிரும் நடந்தது. திருவிழா திருப்பலி மற்றும் மின் அலங்கார தேர்பவனி உள்ளிட்ட விழா நிகழ்ச்சியில் ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
Advertising
Advertising

Related Stories: