குடிபோதையில் வந்த போது டூவீலருடன் ஓடையில் தவறி விழுந்தவர் பலி

குஜிலியம்பாறை, ஜூலை 16: குடிபோதையில் டூவீலரில் வந்த வாலிபர் நிலைதடுமாறி வறட்டாறு ஓடையில் தவறி விழுந்து பலியானார்.குஜிலியம்பாறை அருகே கிழக்கு ராமகிரியை சேர்ந்தவர் சக்திவேல்(37) கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு குஜிலியம்பாறை போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குடிபோதையில் டூவீலர் ஓட்டி வந்த சக்திவேலுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். அபராத தொகையை கட்டி வண்டியை எடுத்து சென்ற சக்திவேல் இரவு வீடு திரும்பவில்லை. நேற்று முன்தினம் இரவு நேரம் முழுவதும் வீடு திரும்பாத சக்திவேலை காணவில்லை என அவரது மனைவி அம்சவள்ளி(35) நேற்று காலை குஜிலியம்பாறை போலீசில் புகார் கொடுத்தார்.

Advertising
Advertising

இந்நிலையில் குஜிலியம்பாறை மின்வாரிய அலுவலகம் எதிரே வறட்டாற்று ஓடையில் டூவீலருடன் வாலிபர் ஒருவர் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் பார்த்தபோது, இரவு நேரத்தில் குடிபோதையில் சாலையில் சென்ற சக்திவேல் நிலைதடுமாறி வறட்டாற்று ஓடையில் டூவீலருடன் விழுந்து இறந்தது தெரியவந்தது. பலியான சக்திவேல் உடல் பிரேத பரிசோதனைக்கு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான சக்திவேலுக்கு விஷால்(9) என்ற மகன் உள்ளார்.

Related Stories: