மொடக்கூர் மேல்பாகம் ஊராட்சியில் சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம்

அரவக்குறிச்சி, ஜூலை 16: அரவக்குறிச்சி ஒன்றியம் மொடக்கூர் மேல் பாகம் ஊராட்சியில் வருவாய் துறையின் சார்பில் பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.அரவக்குறிச்சி ஒன்றியம் மொடக்கூரில் நடைபெற்ற பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் முகாமிற்கு மண்டல துணை வட்டாட்சியர் ராதிகா தலைமை வகித்தார். வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். அப்பகுதி பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவி தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட 25 பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் 2 மனுக்களுக்கு முகாமில் உடனடியாக தீர்வளிக்கப்பட்டது. மீதமுள்ள 23 மனுக்கள் உரிய ஆய்வுக்குப் பிறகு தீர்வு வழங்கப்பட உள்ளது. கால்நடை மற்றும் சுகாதாரத் துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. பள்ளபட்டி குறுவட்ட கிராம நிர்வாக அலுவலர் வளர்மதி முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Tags :
× RELATED வாக்காளருக்கு லஞ்சமோ, வெகுமதியோ கொடுக்க கூடாது