×

வடக்கு காந்தி கிராமம் முல்லை நகரில் படிக்கட்டு உடைந்து சேதமடைந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி

கரூர், ஜூலை 16: கரூர் வடக்கு காந்திகிராமம் முல்லை நகரில் படிக்கட்டுகள் பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் வடக்கு காந்திகிராமம் பகுதியில் முல்லை நகர் உள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் முல்லை நகரின் மையப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து இந்த பகுதியை சுற்றிலும் உள்ள பகுதிக்கு குடிநீர் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் இந்த தொட்டி கட்டப்பட்டு ஆண்டுகள் பல கடந்துள்ள நிலையில் தொட்டியின் அனைத்து பகுதிகளும் முக்கியமாக, படிக்கட்டுகள் அனைத்தும் சிதிலமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே இதனை சீரமைத்து தர வேண்டும் என இந்த பகுதியினர் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுநாள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் இதனை பார்வையிட்டு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
× RELATED குறுவை சாகுபடி பொய்த்து போனதால் சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்