குமரி முதல் காஷ்மீர் வரை 4 லட்சம் விதைப்பந்து தூவும் பணி மாணவியின் விழிப்புணர்வு பிரசார பயணம் நிறைவு

கரூர், ஜூலை 16: நாடு முழுவதும் 8 ஆயிரம் கிமீ தூரம் சென்று கரூர் மாணவி விதை பந்துகளை தூவினார்.
கரூர் ராமேசுவரப்பட்டியை சேர்ந்த ரவீந்திரன், சங்கீதா தம்பதியரின் மகள் ரக்ஷனா. கரூர் தனியார் பள்ளியில் 7ம்வகுப்பு படிக்கும் இவர் பூமி வெப்பமயமாதலை தடுக்கவும், இயற்கை வளத்தை அதிகப்படுத்தவும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சென்று மீண்டும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 8 ஆயிரம் கிமீ சென்று 4 லட்சம் விதைப்பந்துகளை ஒரு கிமீக்கு 50 விதைப்பந்து வீதம் 8 ஆயிரம் கிமீ தூவும்பணியை துவக்கினார்.குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல், பெண்கல்வி ஊக்குவிப்பு, பாலியல் வன்கொடுமை தடுத்தல், அனைவரும் விதைப்பந்து தூவுதல், பறவை இனம் காத்தல், இயற்கை விவசாயம் மேம்படுத்துதல் ஆகிய விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டார். 30 நாட்கள் தனது பயணத்தை நிறைவு செய்த அவர் நேற்று கரூரில் உள்ள பள்ளியை அடைந்தார்.அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் விதைப்பந்துகளை தூவி விழிப்புணர்வு பிரசாரத்தை நிறைவு செய்த புகைப்படம் மற்றும் வீடியோவை டிவிடியாக தயாரித்துள்ளதை பள்ளி முதல்வர் சாம்சனிடம் வழங்கினார். மேலும் தமிழக முதல்வர், பிரதமர் ஆகியோருக்கும் இதன் பிரதியை அனுப்பி வைத்துள்ளதாக மாணவி தெரிவித்தார்.

Tags :
× RELATED சீரமைக்க கோரிக்கை கூட்டு குடிநீர்...