வெங்கமேடு பகுதியில் தெருக்களில் பெயர் பலகை இல்லாததால் மக்கள் திணறல்

கரூர், ஜூலை 16: கரூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியின் பல தெருக்களில் பெயர்ப்பலகை வைக்கப்படவில்லை என பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.கரூர்நகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு, இனாம்கரூர், குளத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் பல்வேறு தெருக்களில் உள்ளன.நகராட்சி சார்பில் குறிப்பிட்ட சில இடங்களில் உள்ள தெருக்களில் மட்டுமே பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பகுதிகளில் பெயர்ப்பலகைகள் வைக்கப்படவில்லை. இதன் காரணமாக அப்பகுதிக்கு புதிதாக வரும் பொதுமக்கள் இடத்தின் அடையாளம் தெரியாமல் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.இது குறித்து இந்த பகுதியினர் அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளனர். எனவே அனைத்து தெருக்களிலும் பெயர்ப்பலகை வைக்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
× RELATED வாக்காளருக்கு லஞ்சமோ, வெகுமதியோ கொடுக்க கூடாது