×

கடத்தூர் கிரீன்பார்க் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

கடத்தூர், ஜூலை 16: கடத்தூர் கிரீன்பார்க் பள்ளியில், காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடத்தூரில் அமைந்துள்ள கிரீன் பார்க் இன்டர்நேஷனல் மற்றும் கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளியில், காமராஜரின் பிறந்தநாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் காமராஜரின் உருவ படத்தை, பள்ளி நிர்வாக அலுவலர் ராஜா திறந்து வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியருக்கு கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பூவிழி முனிரத்தினம் பரிசுகளை வழங்கி பாராட்டினார். பள்ளி முதல்வர் திவ்யஸ்ரீ ராமச்சந்திரன், காமராஜரின் கல்வி பணிகள், சீர்திருத்தங்கள் குறித்து மாணவர்களிடம் பேசினார். பின்னர் மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்தது. விழாவில், இருபால் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா