×

ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்

கிருஷ்ணகிரி, ஜூலை 16: கிருஷ்ணகிரியில் நடந்த ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 27 மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது. கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், ஓய்வூதியர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்தார். சென்னை தமிழ்நாடு ஓய்வூதிய இயக்கக இணை இயக்குநர் இளங்கோவன் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றனர். கூட்டத்தின் போது வரப்பெற்ற 27 மனுக்கள் மீது விசாரணை நடத்தி, உடனடியாக தீர்வு காணப்பட்டது. இந்த கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் லோகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ராமமூர்த்தி (பொது), சென்னகேசவன் (கணக்கு), மாவட்ட கூடுதல் கருவூல அலுவலர் மகாதேவன், கலெக்டர் அலுவலக க்யூ பிரிவு தலைமை உதவியாளர் தங்கபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தனியார் நிறுவனத்தில்
34 தொழிலாளர் பணி நீக்கம்கிருஷ்ணகிரி, ஜூலை 16:  கிருஷ்ணகிரி அடுத்த எலுமிச்சங்கிரி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 34 பேர், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எலுமிச்சங்கிரி கிராமத்தில் உள்ள தனியார் காயில் கட்டும் நிறுவனத்தில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக 170 பேர் பணியாற்றி வந்தோம். ஆனால், இதுநாள் வரை பணி நிரந்தரம் செய்யவில்லை. எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கு விபத்து ஏற்பட்டால், காப்பீடு வசதியும் இல்லை. மிக பழமையான இயந்திரங்களில் பழுது ஏற்பட்டால், அவற்றை சரி செய்வதில்லை. இதனால் தொழிலாளர்களின் கை மற்றும் விரல்களை இழந்து ஊனம் ஏற்பட்டு வருகிறது. அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரிக்கை வைத்தோம். ஆனால், 34 பேரை மட்டும் எந்தவித முன்னறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்துவிட்டனர். இதுகுறித்து தொழிலாளர் நலத்துறையில் புகார் அளித்தோம். ஆனால், அங்கு பதிலளிக்க நிர்வாக இயக்குனர்கள் வரவில்லை. இதனால், வேலை இழந்து தவிக்கும் 34 குடும்பங்களின் நலன் கருதி, கம்பெனியில் விசாரணை நடத்தி, பாதுகாப்புடன் மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்