×

இலவச மருத்துவ முகாமில் மாற்றுத்திறன் மாணவர்கள் 46 பேருக்கு அடையாள அட்டை

தேன்கனிக்கோட்டை, ஜூலை 16: தளியில் நடைபெற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாமில், 46 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் சார்பில், தளியில் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுதாகர் தலைமை தாங்கினார். வட்டார ஒருங்கிணைப்பாளர் சண்முகம், சூசைநாதன் முன்னிலை வகித்தனர். உதவித் திட்ட அலுவலர் நாராயணா முகாமை துவக்கி வைத்தார். இதில் குழந்தைகள் நல மருத்துவர், எலும்பு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள் கலந்து கொண்டு 320 மாணவர்களை பரிசோதித்தனர். இவர்களில், 46 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்க பரிந்துரை செய்தனர். நிகழ்ச்சியில் தளி வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்