×

போச்சம்பள்ளி சந்தையில் 10 டன் வேப்பங்கொட்டை விற்பனை

போச்சம்பள்ளி, ஜூலை 16: சர்வரோக நிவாரணியான வேம்பு மருத்துவ குணம் கொண்டது. இதிலிருந்து கிடைக்கும் கொட்டையிலிருந்து எடுக்கப்படும் வேப்ப எண்ணை சோப்பு, மருந்து பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. மேலும், வெளிநாடுகளுக்கும் வேப்ப எண்ணை ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், வேப்பம் புண்ணாக்கு சிறந்த பூச்சி கொல்லியாகவும். உரமாகவும் பயன்பட்டு வருவதால், வேப்பங்கொட்டைக்கு  விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. போச்சம்பள்ளி பகுதிகளில் வேப்பமரங்கள் அதிகளவு உள்ளது. இதிலிருந்து கிடைக்கும் வேப்ப விதைகளை  சேகரித்து, போச்சம்பள்ளி வாரச்சந்தையில் வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘சந்தையில் ஒரு கிலோ வேப்ப விதை ₹40 முதல் ₹45 வரை விற்பனை செய்யப்படுகிறது. வாரம் தோறும் போச்சம்பள்ளி சந்தையில் 10 டன் அளவிற்கு வேப்பங்கொட்டை விற்பனை செய்யப்படுவதால்,  நல்ல வருவாய் கிடைக்கிறது,’ என்றனர்.

Tags :
× RELATED பேட்டராய சுவாமி கோயில் தேர்த்திருவிழா