×

மாவட்டம் முழுவதும் காமராஜர் பிறந்த தின விழா கொண்டாட்டம்

நாமக்கல், ஜூலை 16: நாமக்கல் மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் கமிட்டி சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. நாமக்கல் நேரு பூங்காவில் உள்ள காமராஜர் சிலைக்கு, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஷேக்நவீத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர் குப்புசாமி, வட்டார தலைவர்கள் சுந்தரம், இளங்கோ, உயர்மட்டக்குழு உறுப்பினர் நடேசன், முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இதேபோல் காமராஜர் தொண்டர்கள் சார்பில் ஏகாம்பரம், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வணிகர் சங்க நிர்வாகி வாசு, சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தமாகா சார்பில், மாவட்ட தலைவர் இளங்கோ, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நகர தலைவர் ராம்குமார் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.திருச்செங்கோடு: திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம்  அருகேயுள்ள காமராஜர் சிலைக்கு,  மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் தனகோபால் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநில நெசவாளர் அணி தலைவர் சுந்தரவேல், துணைத்தலைவர் கதிரேசன், மாவட்ட  தலைவர் தாமோதரன்,  மாவட்ட  பொருளாளர் பொன்னுசாமி, மாவட்ட  துணை தலைவர்கள்  லோகநாதன்,  சிவநேசன், எலச்சிபாளையம் ராஜலிங்கம், மாவட்ட பொதுச்செயலாளர்  கண்ணன் அரங்கநாதன், மயில்சாமி, சேகர், நாகராஜ் உள்ளிட்ட  நிர்வாகிகள்  கலந்து கொண்டனர். ராஜாகவுண்டபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில்  குழந்தைகளுக்கு, இனிப்பு மற்றும் எழுது பொருட்கள்   வழங்கப்பட்டது. தேசிய சிந்தனை பேரவை சார்பில் நடந்த விழாவில், பேரவைத்தலைவர் திருநாவுக்கரசு, காமராஜர் படத்திற்கு மாலை  அணிவித்தார். ஒன்றிய  செயலாளர் மோதிலால் இனிப்பு   வழங்கினார். துணைத்தலைவர் மனோகரன், குழந்தைகளுக்கு காமராஜர் படங்களை  வழங்கினார். நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில்,  சர்வேயர் செல்வகுமார், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஒன்றியம் வேமங்காட்டு வலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா தலைமை ஆசிரியை கௌரி தலைமை தாங்கி பேசினார். ஆசிரியர் ராதா வரவேற்றார். ஓய்வுபெற்ற தமிழாசிரியர் சேகர், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காந்தி நாச்சிமுத்து, திருவள்ளுவர் முத்தமிழ் மன்ற செயலாளர் கைலாசம், ஆசிரியர் முத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.அதுபோல் சின்னப்பநாயக்கன்பாளையம்  தொடக்க பள்ளியில் நடந்த விழாவுக்கு தலைமை ஆசிரியர் பொன்னி வரவேற்றார். சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குப்புசாமி, தளிர்விடும் பாரதம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

Tags :
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா