வித்யவிகாஸ் பள்ளி மாணவிகள் சாதனை

கெங்கவல்லி, ஜூலை 16: மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில், கூடமலை  வித்யவிகாஸ் மெட்ரிக் பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள். சேலம் பொன்னம்மாப்பேட்டையில் நடந்தது. இப்போட்டியில் கூடமலை வித்ய விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இருவர் கலந்து கொண்டனர். இதில் பிரியதர்ஷினி இரண்டாம் பரிசும், கௌசிகா சிறப்பு பிரிவு பரிசும் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை, விருதுநகரில் உள்ள கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் நடந்த மாநில அளவிலான பேச்சு போட்டியில் கலந்து கொண்டனர். மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவிகளை, ஸ்ரீ வித்யவிகாஸ் பள்ளி இயக்குனர்கள் கூடமலை ராஜா, மற்றொரு ராஜா மற்றும் இயக்குனர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

Advertising
Advertising

Related Stories: